தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து ,துர்மரணம், ஜாதக தோஷங்கள் , மாந்திரீக பாதிப்புகள்  இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.


சனி கிழமை காலை 6  மணி முதல்  கோவில்  நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.
திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது.
64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம் . அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும்  ஒரே சக்திதான்.
இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான  விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம்.எல்லா பரிகாரங்களும் செய்து விரக்தி அடைந்தவர்கள்
எந்த துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க வழி  தெரியாமல் தடுமாறுபவர்கள் ,
பெரிய அளவில் பரிகாரமோ , பூஜையோ , ஹோமமோ செய்யமுடியாதவர்கள் அல்லது செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் , வசதி இல்லாதவர்கள்
ஒரே மாத்திரையில் எல்லா வியாதியும் குணமடைய வேண்டும் என
எதிர்பார்ப்போமே , அதே போல எந்த பிரச்னையாக இருந்தாலும்
ஒரே வழிபாட்டில் தீர்வை எதிர்பார்ப்பவர்கள்இந்த பைரவ வழிபாட்டினை செய்யலாம்.


1) வழிபாட்டை ஆரம்பிக்கும் முன் விநாயக பெருமானை வணங்கி ( எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க ) ஒரு சிதறு தேங்காய் உடைத்து  விளக்கு ஏற்றி பிறகு பைரவ வழிபாட்டை ஆரம்பிக்கலாம்.தினமும் வெளியில் இருக்கும் விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி வணங்கி  விட்டு பிறகு உள்ளே செல்லவும். விநாயகர் இல்லையென்றால் ஆன்மிகமே இல்லை , எந்த வழிபாடும் முழுமையடையாது ( எவ்வளவு சிறப்பாக நாம் செய்தாலும் )


2) தினமும் பைரவருக்கு ஒரு (சாதாரண) விளக்கு போட வேண்டும் அவ்வளவு தான்.

3) தினமும் முடியாதவர்கள் வாரத்துக்கு ஒரு நாள் 7 சாதாரண விளக்கு போட வேண்டும் , அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் உத்தமம் . மத்த நாளிலும் ஏற்றலாம்.


4) வெளிநாட்டில்  இருப்பவர்களுக்கு  அவர்கள் சார்பாக ( அவர்களுக்காக ) அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் இந்த வழிபாட்டினை செய்யலாம்.விஷயம் இவ்வளவுதான் தினமும் வெளியில் இருக்கும் விநாயகருக்கு ஒரு சின்ன விளக்கு ஏற்றி விட்டு பின் உள்ளே இருக்கும் பைரவருக்கு ஒரு விளக்கு ஏற்றனும்.

பைரவரே கால சக்கரத்திற்கு அதிபதி , அனைத்து கோள்களையும் தன்னுடைய கட்டுபாட்டுக்குள் ( இயக்கத்திற்குள் ) வைத்திருப்பவர் ,ஞாயிறு - சூரியன் கோளையும் ,திங்கள் - சந்திரன் கோளையும் , செவ்வாய் - செவ்வாய் கோளையும் , புதன் - புதன் கோளையும் , வியாழன் - குரு கோளையும் , வெள்ளி - சுக்கிரன் கோளையும் , சனி - சனி கோளையும் கிழமைகளை ஆதிக்கம் செய்கின்றன.எனவே  7 நாட்களும் ஒவ்வொரு கோளுக்கு உகந்த நாட்கள்
( ராகு , கேது  கோள்கள் கிடையாது , அதனால் தினமும் ராகு காலம் , எம கண்டம் என அவற்றிக்கென  நேரம் மட்டும்  ஒதுக்கப்பட்டுள்ளது  )அனைத்து கிரகங்களையும் வணங்குவதற்கு பதில் அவற்றை இயக்கம் பைரவரை வணக்குவதன் மூலம் அனைத்து ஜாதக தோஷங்களும் நீங்கும்.
ஆகையால் தினமும் விளக்கு போட முடியாதவர்கள் ( தவிர்க்க முடியாத காரணத்தினால் ),  வாரத்திற்கு ( 7 நாட்களுக்குள் ஒருமுறை ) ஒரு நாள் 7 விளக்கு போட்டு வர வேண்டும்.
விளக்கு போட ஆரம்பிச்சதுல இருந்து 2 வது தேய்பிறை
அஷ்டமிக்குள்ள நிறைய நன்மை ஏற்பட்டிருக்கும் அதுவும்.
வெளிப்படையாகவே நமக்கும் தெரியும் , நம்மை சார்ந்த எல்லாருக்கும் தெரியும்.
நாம் வேண்டுவது , பட்டியலிடுவது எதுவுமே நடக்காது , நமக்கு எதெல்லாம் அத்தியாவசிய தேவையோ அதுதான் ஒவ்வொன்றாக கிடைத்து கிட்டே இருக்கும் ( இத்தனை நாள் எல்லாம் கணக்கு கிடையாது , ஆனா கண்டிப்பா கிடைக்கும்/ நடக்கும்  )
நாம செய்து கொண்டிருக்கிற தவறை நமக்கு உணர்த்தி , நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர வைப்பதற்க்காக ,ஆரம்பத்துல கொஞ்ச நாள் சோதனை ங்கற  பேர் ல ரொம்ப படுத்தி எடுத்துருவார். என்ன நடந்தாலும் பொறுமையாக விடாமல் தொடர்ந்து இந்த வழிபாட்ட செய்வதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது.
 கெட்ட விஷயங்கள், கஷ்டங்கள் - துன்பங்கள்  எல்லாமே  நம்மை விட்டு விலக ஆரம்பிக்கும் ,  நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றாக  கண்டிப்பா நடக்க ஆரம்பிக்கும் . நாம்  எந்த நிலையில் இப்போ இருந்தாலும் , முன்னேற்றத்த நோக்கி போக ஆரம்பிப்போம். அதற்க்கு சில சிக்கல்களும் , அதை தீர்க்கும் வழி முறைகளையும் அவரே கொடுப்பார் , இதுதான் இந்த வழிபாட்டோட முதல் அறிகுறி . இந்த மாற்றம் வெளிப்படையாகவே நமக்கு தெரியும்.
இந்த வழிபாட்டோட பலனுக்கான அறிகுறி
உங்களுக்குள்ளான ,உங்களுக்கே  தெரியாத  உங்களுக்கு அத்தியாவசிய  தேவையான ( உந்துதல் / சக்தி/ திறமை / ஆற்றல் / ஏதோ ஒன்று ) உங்களுக்குள்ள இருந்து வெளிபடும்.
அந்த ( உந்துதல் / சக்தி/ திறமை / ஆற்றல் / ஏதோ ஒன்று ) தான் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான எல்லாத்தையும் உங்களுக்கு கொடுக்கும்.
அதற்காக உங்களுக்கு அளவுக்கதிகமான விரக்தியும் , தேவைபட்டால் பெரிய அவமானத்தையோ அல்லது சிக்கலையோ கொடுப்பார் . அதை தீர்க்கும் வழிமுறையையும் அவரே வெளிகாட்டுவார் கண்டிப்பா உயிருக்கு எந்த பிரச்னையும் வராது . முன்பை விட ரொம்ப தெளிவாகவும் , பக்குவ பட்ட மன நிலையையும் அடைந்து இருப்பீர்கள்.